Tuesday, December 11, 2012

Life of Pi - Review

Life of Pi என்ற படம் இந்தியாவில் எடுக்கப்பட்டதாகவும் எடுத்தவர் ஆங்  லீ  என்றும் துவிட்டரில் @sudhishkamath கூறியவுடன் ஆர்வம் தொற்றிகொண்டது ,அதுவும் சுதிஷின் பேட்டி  மற்றும் சத்யம் திரைஅரங்கிற்கு  லீ வந்தது உலகநாயகன் கமலுடன்  விஜய் தொலைக்காட்சி பேட்டி ஆகியவை மேலும் ஆர்வத்தை தூண்ட  யான் (yaan martel) மர்டேளுடைய  புத்கத்தை படித்தேன் அது இன்னும் சுவாரசியமாக இருக்க எப்படி இந்த கதையை திரைக்கு  கொண்டு வர போகிறார்கள் என்ற ஆர்வம்  தலைக்கேரிவிட்டது .

  லைப் அப் பை இந்தியாவில் வெளியான முதலே வார கடைசியில் போய் விட வேண்டும் என்று புக் செய்ய முற்பட்டேன் பல அலுவல்கள் காரணமாக டிசம்பர் 9 ஆம்  தேதி தான் காண முடிந்தது ,ஹைதராபாத் ஐமேக்ஸ் அரங்கிற்குள் நுழைந்தவுடன்  தெரிந்தது பல சிறு குழந்தைகளும் நிறைய பேர் குடும்பத்துடனும் வந்திருப்பது ,குழந்தைகளின் சிரிப்பு  மற்றும் குதுகலம் என்னையும் தொற்றிக்கொள்ள விளம்பரம் முடிந்து பெயர் மற்றும் ஆரம்பக்கட்சியில் வாய்  பிளக்க ஆரம்பித்தவன்  தான் அதுவும் அந்த பின்னணி இசை வாவ் ,நாவலில் வருவது போன்றே கனடாவில் இருந்து ஆரம்பிக்கிறது, லீ மிக சாமர்த்தியமாக அறிவியல் வாத்தியாரை பையின் தந்தையாக மாற்றி விட்டார், அந்த ஆரம்ப மதம் பற்றிய காட்சிகள் கொஞ்சம் அறுவை தான் ஆனால் அதில் தான் பையுடைய ஜீவன் இருக்கிறது .என்னை பொறுத்தவரை Life of Pi மொத்த கதையுமே God Vs Science தான் அதிலும் முடிவை நம்மளிடமே  விடும் கமலஹாசதனமான ஒரு நாவல் .லீ ஒவ்வொரு சின்ன விசயத்திற்கும் (detail)எடுத்திற்கும் கவனம் பிரமிக்கதக்கது தமிழ் மற்றும் இந்திய இயக்குனர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது ,எங்கோ  தைவானில்  பிறந்தவர் மூனார்  மற்றும் தமிழ் இசை மற்றும் உச்சரிப்பில்  கவனம் செலுத்தும்போது இங்கே மும்பையில் Ra.one படத்தில் உபயோகிக்கும் அலட்சிய தமிழ் வேதனைபடுத்துகிறது .

 அந்த புலியை அறிமுகபடுத்தும்  காட்சியில் பையின் தந்தை வந்து மிருங்களை அதுவும் வனத்தில் இருந்து வந்த மிருகங்களிடம் எப்படி ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்று புரியவைப்பதற்காக ஒரு ஆட்டை புலியிடம் விட்டு அதை தன மகன்களை பார்க்க வைப்பார் இந்த காட்சி வரும் பொது அடடா சிறு குழந்தைகள் இருக்கிறார்களே அவர்கள் இந்த வன்முறை பாதிக்குமே என்று நினைக்கும் போதே மிகவும் கட்சிதமாக  (cut shot)அந்த காட்சியை முடித்திருப்பார் அங்கு தான் ஆங்  லீ ஆஸ்கார் வாங்கிய படங்களை எடுத்தவர் என்று நிருபித்துவிட்டார் .
                                அந்த கப்பல் கவிழும் காட்சி மற்றும் எப்படி அந்த வரிக்குதிரை மற்றும் பை அந்த உயிர்க்காப்பு படகில்  (life boat) வந்தார்கள் என்ற காட்சிபடுத்துதல் அபாரம்  அந்த கழுதை புலியை வரிப்புலி கொல்லும்  காட்சி 3D யின் உச்சம் . பிறகு அந்த புலியுடன் பை ஒரு காஸ்ட் அவேவாக (caste away ) பயணிக்கும் காட்சிகள் எல்லாம் ஒரு தன்னம்பிக்கை மிக்க மனிதனையே காட்டுகிறது மனிதனின் ஆறாவது அறிவும் மனிதன் மிருகத்திடமிருந்து  எங்கு வேறுபடுகிறான் என்பதே இந்த படலம் ,நாம் நினைத்தால் எதைவேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்பது தான் சாராம்சம் அதை மிக அழகாக  காட்சிபடுதிள்ளனர் மத்தபடி அந்த டொராடோ (dorado fish ),திமிங்கலம்,கோலா மீன் (flying fish),tiger shark,டால்பின்,ஒளிரும் ஜெல்லி மீன்  போன்றவற்றை காட்சிபடுத்திருப்பது இயற்கையை ரசிப்பவர்களுக்கு  விருந்து  ,சிறு குழந்தைகளுக்கு இயற்கை தாயின் அற்புதங்களை அறிமுகபடுத்துகிறது அந்த பாசிகளால் ஆனா தீவை எப்படி காண்பிப்பார்கள் என ஒரு ஆர்வம் இருந்தது என் எதிர்பார்ப்பிற்கு மேலே இருந்தது என்றே சொல்ல வேண்டும் கடைசி ஒரு அரை மணி நேரம் magical  realism  தான் 3D ல் நல்ல அனுபவம் அதுவும் என்னை மாதிரி கடல் சார் ரசிகர்களுக்கு விருந்து தான் ஆ என்று நான் வாய்பிளந்து எந்த படத்தையும் பாத்ததில்லை இதுவரை நன்றி ang  lee .புலியை CG ல்  உருவாக்கியது பசிபிக் பெருங்கடலை தண்ணி தொட்டியை வைத்து கொண்டுவந்தது போன்றவை பிரமிப்பு.
                           அந்த கடைசி கிளைமாக்ஸ் காட்சில் வரும் இந்த கதையை என்னால் நம்பமுடியாது நம்பும்படியாக எதாவது சொல் என்பது காலங்காலமாக கடவுள் Vs அறிவியல் தர்க்கமாக என்னால் பார்க்கமுடிகிறது முடிவை அவரவர் விருபதிற்கே விட்டுவிட வேண்டியது தான் .கடவுள் பக்தி மற்றும் துணை இருந்ததால் தான் பையால் இத்தனை நாள் பசிபிக் பெருங்கடலில் உயிர் வாழ முடிந்தது என கடவுள் பக்தயுள்ளவர்களும் ,அந்த survival guide மற்றும் பையின் புத்திசாலித்தனம் (மீன் ,ஆமை,பாசி ,குடிநீர் ஆகிவற்றை சேமிக்கும் முறை )தான் அவனை காப்பாற்றியது என்று பகுத்தறிவாளர்கள் எடுத்துகொள்ளலாம்  .

                                          குழந்தைகளையும்,குடும்பங்களையும் திரை அரங்கிற்கு கொண்டுவந்ததற்கு நன்றி ஆங்  லீ

 Life of pi- Journey into a magical realism