Wednesday, December 21, 2011

உபுண்டு உலவிகளில் தமிழ் எழுத்துக்கள் சரியாக தெரியவைப்பது எப்படி

நான் சில காலமாக உபுண்டு பயன்படுத்த தொடங்கினேன் எல்லாம் சரியாக இருந்தாலும் நெருப்பு நரியில் தமிழ் எழுத்துருக்கள் சரியாக தெரிய வில்லை வாசிப்பதற்கு மிக கடினமாக இருந்தது .எனவே முதலில் நான் குரோமியம் ப்ரௌசெர் நிறுவி பார்த்தேன் அதிலும் அதே பிரச்சனை தான் எனவே tamil-ttf எழுத்துருக்களை நிறுவி பார்த்தேன் அப்பொழுதும் சரியாகவில்லை .எனவே கூகுளே ஆண்டவரிடம் சரணடைந்தேன் அதில் நான் கண்டுபிடித்த தீர்வை சுலபமாக இங்கே தருகிறேன் .

தமிழ் எழுத்துக்கள் வலைபக்கத்தின் உள்பகுதியில் மட்டும் சரியாக தெரியாமல் இருக்கும் இந்த மாதிரி





இது எதனால் ஏற்படுகிறது என்றால் Lohit Tamil என்கிற எழுத்துருவை உலவி தேடும் போது அது கிடைக்காமல் freesans ,freeserif போன்ற எழுத்துருவை பயன்படுத்துவதால் .இதற்கு என்ன செய்ய வேண்டும்

முதலில் ttf-tamilfonts எழுத்துருக்களை நிறுவ வேண்டும் எப்படி நிறுவுவது
1. டெர்மினல் சென்று sudo apt-get install ttf-tamil-fonts
2.synaptic package manager சென்று ttf-tamil-fonts தேடி நிறுவலாம் பின்னர்
usr/share/fonts/truetype/freefont இந்த இடத்திற்கு போய் FreeSans.ttf,FreeSerif.ttf ஆகியவை இருக்கிறதா என்று சரிபார்த்துவிட்டு டெர்மினல் சென்று sudo apt-get remove ttf-freefont கொடுக்கவும் இதனால் gnome இற்கு எந்த பாதிப்பும் வராது.அதன் பிறகு எல்லா உலவிகளிலும் தெளிவாக தமிழ் எழுத்துக்கள் தெரியும்.


உதவி:
tamil ezhuthuru

Monday, December 5, 2011

சென்னை நகரமும் சில மனிதர்களும்

முன்னறிவிப்பு : இது எந்த தனிப்பட்ட நபரையும் தாக்கும் பதிவல்ல காலங்காலமாக இருக்கும் பொதுபுத்தி பற்றியது மட்டுமே.



இந்த காணொளியை முகநூளில் காண நேர்ந்தது அதில் நண்பரொருவர் இட்ட மறுமொழி இந்த கானொளியில் இருப்பது போலா சென்னை இருக்கிறது சாலைகள் குண்டும் குழியுமாகவும் ஆட்டோ ஓட்டுனர்கள் ரௌடிகளாகவும் குண்டர்களும் பிடியில் மொத்த நகருமும் உள்ளதெனவும் மற்ற நகரங்களில் இவையாவும் உள்ளதென்றாலும் சென்னை முன்னேற விரும்புவதாகவும் அதனால் முதலில் சென்னையை சிங்காரமாக மாற்றிவிட்டு பிறகு இப்படி சலனப்படங்களை எடுக்கலாம் .

என்னோட கேள்வி நீங்கள் முன்வைக்கும் இந்த தகுதியெல்லாம் இருந்தால் தான் ஒருவர் சென்னையை பற்றி சலன படம் எடுக்க வேண்டுமா ? நீங்க சொல்லும் இந்த எல்லா தகுதிகளும் எந்த நாட்டிலும் எந்த ஊரிலும் இருக்காது ஒவ்வொரு நகரத்திலும் ஒரு குறை இருக்கும் (உ.த) நியூ யார்க் வாசிகளை கேட்டால் பனி நிரம்பிய சாலை ,ஜன நெருக்கடி ,வாகன நிறுத்துமிடம் இல்லை வழிப்பறி போக்குவரத்து போன்றவற்றை கூறுவர் ஆனால் அவர்கள் யாரும் தம் தாய் மொழியையோ தாய் நாட்டையோ தான் வசிக்கும் நகரத்தையோ அடுத்தவரிடம் மட்டமாக சொல்வதில்லை .இந்த தமிழன் மட்டும் ஏன் தான் தமது மாநிலத்தை பற்றி மொழியை பற்றி பிறரிடம் குறைத்தே சொல்கிறானோ தெரியவில்லை ,அயல் மாநிலத்தவர் யாரும் இப்படி குறை கூறி நான் பார்த்ததில்லை ஆனால் ஒவ்வொரு தமிழனும் அடுத்த மாநிலத்தவரிடம் சென்னையை தமிழை விடாமல் குறை கூறுகின்றனர் .ஒரு சமயம் சென்னை பற்றி கூறுங்களேன் என்று ஆந்திர நண்பர் என்னை வினவினார் நானும் ஒவ்வொரு இடமாக சொல்லிக்கொண்டே வர என்னருகில் இருந்த சென்னையிலே பிறந்து வளர்ந்த அந்த நபர் மெரினா பீச் அது ஒரு குப்பை பீச்,மகாபலிபுரமா அது கள்ள காதல் ஜோடி போற எடம் மேற்கொண்டு chennai no good food ,bad road,full rush total waste என்று விளக்குகினார் .இது போன்று பல அனுபவங்கள் எனக்கு உண்டு.

மும்பை,கொச்சி,கொல்கத்தா போன்ற நகரங்களை ஒப்பிட்டு நிறை குறைகளை அடுக்கி கொண்டே போக இயலும் ஆனால் அது தேவையற்றது ஒவ்வொரு நகரமும் தனித்துவமிக்கது .நான் இங்கே கூறவிரும்புவது ஒன்று தான் முகநூல்,ட்விட்டர் போன்ற சமூக தளங்களில் இந்த மாதிரி எழுதுவதுற்கு முன்னாள் நம் நண்பர்கள் வட்டத்தில் பிற மாநிலத்தவர்/நாட்டவர் இருக்கிறார்கள் அவர்கள் நம் மாநகரை/மாநிலத்தை/மொழியை பற்றி என்னை நினைப்பர் சிறிதேனும் அவர்கள் மனதில் ஒரு கெட்ட அபிப்ராயம் வந்துவிடாதா என்று யோசியுங்கள் ,நம்மால் புகழ தான் முடியவில்லை சற்று தூற்றாமலாவது இருக்கலாமே .ஐ பி எல் கிரிக்கெட் போட்டியின்போது மட்டும் வரும் உணர்வெழுச்சி மத்த நேரங்களில் காணாமற் போவது ஏன் ? .

Thursday, December 1, 2011

முல்லை பெரியார் நடப்பது என்ன

முல்லை பெரியார் பற்றி சமீப காலமாக செய்தி அடிபடுகிறது தொலைகாட்சியில் ,இணையத்தில் ,பாராளுமன்றத்தில் என்னை தான் நடக்கிறது என்று சற்று பார்ப்போம் .


முல்லை பெரியார் அணை
முல்லை ஆறும் பெரியாரும் கலந்து ஓடும் தேக்கடியில் உள்ளது . 1895ஆம் ஆண்டு ஆங்கில ஆட்சியில் தமிழ் நாட்டிற்கு தண்ணீர் எடுத்து வருவதற்காக அரபி கடலில் வீணாக கலக்கும் பெரியாறு தண்ணீரை திசை திருப்பி தமிழகத்திற்கு கொண்டுவருவதற்காக செயல் படுத்தப்பட்ட திட்டம் . இதன் மூலம் தென் தமிழகத்தில் 5 மாவட்டங்கள் குடிநீர்க்காகவும் விவசாயத்திற்கும் இந்த நீர் பயன்படுகின்றது .இந்த அணை முற்றிலும் தமிழகத்திற்காக மட்டுமே கட்ட பட்ட அணை என்பது தான் வரலாறு அதனால் தான் ஆங்கிலேயர்கள் திருவிதாங்கூர் மன்னரிடம் 999 வருட குத்தகை போட்டுள்ளனர் .

அணை கட்டி நூறு வருடங்கள் ஆகிவிட்டது
முல்லை பெரியார் அணை 115 ஆண்டு தான் ஆகிறது அனால் நம் கண்ணெதிரிலேயே கல்லணை 1000 ஆண்டுகளை கடந்து கம்பீரமாக நிற்கிறது .100 ஆண்டுகளை கடந்த அணைகள் உலகம் முழுவதிலும் ஏராளம் உள்ளன கூகுளிட்டு தெரிந்துகொள்ளவும் .

அணை பலவீனமடைந்துவிட்டது
முல்லை பெரியார் அணை (gravity) புவியிர்ப்பு வகை சார்ந்தது அதாவது தன்னுடைய பலத்தால் (mass) தண்ணீரின் அழுத்தத்தை தாங்கும் அணை.1970 ற்கு பிறகு பல கட்டமாக அணை தமிழக அரசால் பலபடுத்தபட்டுள்ளது .கேரளா அரசால் திட்டமிட்டு பரப்பப்படும் பொய் இது .நிலா நடுக்கம் அதிக அளவில் வந்தாலும் தாங்கும் அளவிருக்கு அணை வலுவூட்டபட்டுள்ளது .வேறெங்கும் பதிவாகத நில நடுக்கம் கேரளா அரசிற்கு மட்டும் கிடைப்பது ஆச்சர்யம் தான் . இந்த கானொளியில் video அணை எப்படி பலப்டுத்தபட்டதென்று விளக்கமாக உள்ளது .

புதிய ஆணை கட்ட கேரளா அரசு தீவிரமாக முயல்வது எதற்கு ?
இடுக்கி ஆணை மூலம் போதுமான அளவு மின்சாரம் தயாரிக்க முடியவில்லை அதனால் அந்த அணைக்கு வரும் தண்ணீர் அளவை அதிகரிக்க வேண்டும் அதற்கு முல்லை அணையை இடிக்க வேண்டும் .முல்லை பெரியார் ஆணை உடைந்தாலும் அவர்கள் போலி வீடியோவில் காட்டுவதுபோல ஒன்றும் நடக்காது இடுக்கி அன்னை முல்லை அணையை விட பெரியது முல்லை அணையிலிருந்து வடியும் தண்ணீரை அது தாங்கிக்கொள்ளும் .அவர்கள் பரப்புவது போல் உயிரிழப்போ கேரளாவே தண்ணீரில் மூல்குவதோ நடக்காது அவை முற்றிலும் கற்பனையே ,ஏற்கனவே கேரளா தொழில்துறை பெரிதாக ஒன்றும் இல்லை ,இதில் தற்போது இருக்கும் மின்சார தட்டுபாடால் இருக்கும் நிறுவனங்களும் போய்விடும் என்பது தான் அவர்களின் முழுமுதல் நோக்கம் .மேலும் தமிழகத்தை கட்டுப்பாடில் வைக்க ஒரு கருவி வேண்டும். மின்சாரம் தான் தேவை என்றல் அதற்கு மாற்று வழி கண்டுபிடிக்க கேரள அரசு முயல வேண்டும்தவிர இருக்கும் அணையை இடிக்க நினைப்பது எந்த வகையில் ஞாயம் என்று தெரியவில்லை .



தற்போதய அணை இடிக்கப்பட்டு புதிய அணை கட்டினால் என்ன ?
புதிய அணை கட்டினால் நமக்குள்ள உரிமை முழுவதும் பறிபோய்விடும் இப்போதிருக்கும் மின்சாரம் எடுக்கும் உரிமை மற்றும் புதிய அணை தாழ்வு பகுதியில் இருப்பதால் 150 அடிக்குமேல் தண்ணீர் சேகரிக்க முடியாது 148 அடிக்கு மேல் இருக்கும் தண்ணீரைத்தான் தமிழகம் எடுக்க முடியும் அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடும் .

காண்க















நாம் செய்யவேண்டியது என்ன
கேரள அரசும் ,கேரளா மக்களும் கூறும் பொய்களையும் ,மக்களிடம் ஏற்படுத்தும் பயத்தையும் போக்க வேண்டும் நம்மால் சாலையில் இறங்கி தான் போராட முடியாது ,twitter,Facebook,Blog போன்றவற்றில் அவர்கள் செய்யும் பொய் ப்ரசாரத்தயாவது முறியடிக்கலாம் அல்லவா . கீழ்காணும் facebook page,youtube video,twitter hashtag போன்றவற்றை பிரபலபடுத்துங்கள் .why this kolaveri போன்ற புரட்சிகர பாடல்களை எல்லாம் ஹிட்டடிக்க வைக்கும் நாம் ,நமது மாநிலத்தின் உரிமைக்காகவும் 30 லட்சம் மக்களின் நலனிற்கும் ஒரு 5 நிமிடம் செலவு செய்வது தவறில்லை .

அவசியம் காண்க :
Facebook page
Youtube video 1
youtube video 2
Article in English

p.s : சென்னையில் வாழ்ந்ததால் மலையாளிகள் நிறைய பேர் எனக்கு நண்பர்களாக உள்ளனர் அவர்கள் யாரும் இந்த புரளியை பரப்பவில்லை இது முற்றிலும் கேரள அரசின் வேலையே தவிர கேரளமக்களின் நோக்கம் அல்ல .